Skip to main content

பிரபாஸுடன் நடிக்கும் யஷ்; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

yash cameo role prabhas salaar movie

 

கே.ஜி. எஃப் 2 படத்தைத்  தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் நீல், பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை இயக்கி  வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, ஜெகபதிபாபு, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பெரும் பொருட்செலவில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் சலார் படத்தில் நடிகர் யஷ் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. யஷ்ஷும், பிரபாஸும் ஒன்றாக திரையில் தோன்றவுள்ளது இப்போதே தெலுங்கு மற்றும் கன்னட ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  மேலும், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிரித்திராஜ் ராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. சமீபத்தில் இது குறித்த பேசிய பிரித்விராஜ், ”சலார் மிகப் பிரம்மாண்ட படம், அதில் நடிக்க வேண்டும் என்றால் பல மாதங்கள் கால்ஷீட் தேவைப்படும், அதனால் என்னுடைய அடுத்தடுத்த படங்களின் தயாரிப்பாளர்களிடம் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்” என்றார். கிட்டத்தட்ட இவரும்  ஓகே சொல்லிவிடுவார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யஷுக்கு ஜோடியாகும் ஷங்கர் பட ஹீரோயின்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
kiara advani to pair with yash in toxic movie

'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு அடுத்த படத்திற்கு 1 வருடத்திற்கு மேலாக காலம் எடுத்து கொண்டார். இவரின் அடுத்த பட அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே பாலிவுட்டில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் ராவணனாக நடிக்க கமிட்டாகியுள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. 

கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘டாக்சிக்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. அதில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஒரு ஆக்‌ஷன் நிறைந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

kiara advani to pair with yash in toxic movie

இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது கரீனா கபூர் யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் ஹீரோயினாக கியாரா அத்வானி கமிட்டாகியுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கியாரா அத்வானி தற்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

நடிப்பிற்கு சின்ன பிரேக் விடும் பிரபாஸ்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Prabhas take a short break from cinema

பிரபாஸ், சமீபத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் படத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனமே பெற்ற இப்படம், உலகளவில் ரூ. 600 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்து தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கும் தி ராஜா சாப், சந்தீப் ரெட்டி வங்காவின் ஸ்பிரிட், இந்தியில் நாக் அஷ்வின் இயக்கும் கல்கி 2898 ஏடி உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். 

இப்படி வரிசையாகப் படங்களை கமிட் செய்துள்ள பிரபாஸ் தற்போது நடிப்பிலிருந்து சிறிய பிரேக் எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலையை பாதுகாப்பதற்காக ஒரு மாதம் ஓய்வெடுத்து, அடுத்த மாதமான மார்ச்சில் மீண்டும் நடிப்புக்கு திரும்ப பிரபாஸ் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சலார் படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றதால், அடுத்து எவ்வாறு முன்னோக்கி செல்லலாம் என திட்டம் தீட்டவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.