Skip to main content

கோவா முதல்வருடன் யஷ் திடீர் சந்திப்பு

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

yash and his wife met goa cm Pramod Sawant

 

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தை ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படம் உலக அளவில் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளது. இதுவரை தென்னிந்திய படங்களான பாகுபலி ஆர்.ஆர்.ஆர் படங்கள் மட்டுமே இந்த ரூ.1000 கோடி வசூல் சாதனையை நிகழ்த்திருந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் கே.ஜி.எஃ ப் 2 படம் இணைந்துள்ளது. 

 

இந்நிலையில் படத்தின் நாயகன் யஷ் தனது மனைவி ராதிகா பண்டிட்டுடன் இணைந்து கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.  யஷ் மனைவி ராதிகா பண்டிட் பிறந்த ஊரான கோவாவிற்கு திடீர் விசிட்டடித்த அவர்கள் அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த்தை நேரில் சென்று சந்தித்து உரையாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், கே.ஜி.எஃப் சூப்பர் ஸ்டாரை சந்தித்ததில் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யஷுக்கு ஜோடியாகும் ஷங்கர் பட ஹீரோயின்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
kiara advani to pair with yash in toxic movie

'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு அடுத்த படத்திற்கு 1 வருடத்திற்கு மேலாக காலம் எடுத்து கொண்டார். இவரின் அடுத்த பட அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே பாலிவுட்டில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் ராவணனாக நடிக்க கமிட்டாகியுள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. 

கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘டாக்சிக்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. அதில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஒரு ஆக்‌ஷன் நிறைந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

kiara advani to pair with yash in toxic movie

இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது கரீனா கபூர் யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் ஹீரோயினாக கியாரா அத்வானி கமிட்டாகியுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கியாரா அத்வானி தற்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

‘தாங்கிக் கொள்ள முடியவில்லை’ - 4 வயது மகனை கொன்ற கொடூரத் தாயின் கடிதம்

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
letter from mother who lost his lives 4-year-old son at goa incident

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுசானா சேத் (39). இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வெங்கட்ராமன் என்பவருடன் திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் இருந்தான். தம்பதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி சுசானா சேத் தனது மகனுடன் கோவாவில் உள்ள பிரபலமான ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து, அவர் கடந்த 8 ஆம் தேதி காலை ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு வாடகை கார் மூலம் பெங்களூருக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், சுசானா சேத் இருந்த அறையை சுத்தம் செய்ய பராமரிப்பு ஊழியர் அறைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு, ரத்தக் கறைகள் படிந்த ஆடைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்த சம்பவம் குறித்து ஓட்டல் நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தார். 

இதில் சந்தேகமடைந்த ஓட்டல் நிர்வாகம், இந்த சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து ஓட்டலில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார், சுசானா சேத் பயணித்த வாடகை கார் ஓட்டுநரிடம் தொடர்புகொண்டு அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு காரை கொண்டு வருமாறு போலீசார் கூறியுள்ளனர். அதன்படி, கார் ஓட்டுநர் ஓட்டி வந்த காரை ஜமங்கலா போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காரில் இருந்த சூட்கேசில் சுசானா சேத்தின் 4 வயது மகன் பிணமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுசானா சேத் தனது மகனைக் கொன்று உடலை சூட்கேசில் அடைத்து காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சுசானா சேத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

அந்த விசாரணையில், சுசானா சேத்துக்கும் அவரது கணவரான வெங்கட்ராமனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர்கள் இருவரும் விவாகரத்து வழங்கக் கோரி பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன், தனது மகனிடம் பேச அனுமதி அளித்து இருந்தது. அதன்படி,  கடந்த 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன் தனது மகனிடம் பேச, சுசானா சேத்தின் செல்போனுக்கு வீடியோ காலில் அழைத்து பேசிய போது மகனிடம் போனை கொடுக்காமல் மறுத்துள்ளார். 

letter from mother who lost his lives 4-year-old son at goa incident

அப்போது, அவரது மகன் தனது தந்தையிடம் பேச வேண்டும் என்று கூறி அடம்பிடித்து அழுது கொண்டிருந்துள்ளான்.  இந்த நிலையில், கணவர் மீது இருந்த அதிருப்தியிலும், மகன் அவரிடம் பேச வேண்டும் என்று அடம் பிடித்ததாலும் கோபத்தின் உச்சியில் இருந்த சுசானா சேத், தனது மகனைக் கொல்ல திட்டமிட்டு தனது மகனுக்கு அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து கொடுத்து, அவன் மயங்கியதும் மூச்சைத் திணறடித்து கொலை செய்திருக்கிறார் என்று தெரியவந்தது.

இந்த நிலையில், தனது மகனை கொலை செய்துவிட்டு சுசானா சேத் தன் கண் மையால் எழுதியிருந்த கடித்ததை போலீசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசானா சேத் எழுதிய அந்த கடிதத்தில், ‘நீதிமன்றமும், ஒரு பக்கம் எனது கணவரும், மகனை தான் வைத்துக்கொள்ள முடியாமல் அழுத்தம் கொடுக்கின்றனர். இனிமேலும், இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் முன்னாள் கணவர் ஒரு வன்முறையாளர். தவறான பழக்கங்களை என் மகனுக்கு கற்பித்தார். ஒரு நாள் கூட அவரிடம் மகனை விடுவதற்கு எனக்கு ஒப்புதல் இல்லை’ என்று எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.