Advertisment

"வார்த்தைகளில் விவரிப்பது கடினம்" - யஷ் ஆறுதல்

yash about odisha train accident

Advertisment

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றும் தொடர்கிறது.

தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் யஷ், "ஒடிசாவின் ரயில் விபத்து, எப்படி இதயத்தை உலுக்கியது என்பதை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப்பிரார்த்திக்கிறேன். மீட்புப் பணிகளில் திரளாக வந்து உதவிய மக்களுக்கு நன்றி" எனக்குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இதே போல் ராஷ்மிகா மந்தனா, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலரும் தங்களது மாறுதல்களைப் பதிவாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

odisha train accident yash
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe