Skip to main content

"வார்த்தைகளில் விவரிப்பது கடினம்" - யஷ் ஆறுதல்

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

yash about odisha train accident

 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றும் தொடர்கிறது.

 

தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

 

இந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் யஷ், "ஒடிசாவின் ரயில் விபத்து, எப்படி இதயத்தை உலுக்கியது என்பதை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். மீட்புப் பணிகளில் திரளாக வந்து உதவிய மக்களுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

இதே போல் ராஷ்மிகா மந்தனா, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலரும் தங்களது மாறுதல்களைப் பதிவாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யஷ் படத்தில் இணையும் நயன்தாரா 

Published on 07/05/2024 | Edited on 07/05/2024
nayanthara to join with yash movie toxic

'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு அடுத்த படத்திற்கு 1 வருடத்திற்கு மேலாக காலம் எடுத்து கொண்டார். இவரின் அடுத்த பட அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே பாலிவுட்டில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் ராவணனாக நடிக்க கமிட்டாகியுள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. 

இதில் கீது மோகன் தாஸ் படத்தை கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க ‘டாக்சிக்’ என்ற தலைப்பில் உருவாகிறது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. அதில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஒரு ஆக்‌ஷன் நிறைந்த படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகை கரீனா கபூர், யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கரீனா கபூர் தற்போது கால்ஷீட் பிரச்சணை காரணமாக விலகியுள்ளதாகவும் அதற்கு பதில் நயன்தாராவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டுமல்லாமல் மலையாளத்தில் நிவின் பாலி நடிக்கும் ‘டியர் ஸ்டூடண்ஸ்’ என்ற படத்திலும் நடிக்கிறார். 

Next Story

யஷுக்கு ஜோடியாகும் ஷங்கர் பட ஹீரோயின்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
kiara advani to pair with yash in toxic movie

'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு அடுத்த படத்திற்கு 1 வருடத்திற்கு மேலாக காலம் எடுத்து கொண்டார். இவரின் அடுத்த பட அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே பாலிவுட்டில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் ராவணனாக நடிக்க கமிட்டாகியுள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. 

கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘டாக்சிக்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. அதில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஒரு ஆக்‌ஷன் நிறைந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

kiara advani to pair with yash in toxic movie

இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது கரீனா கபூர் யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் ஹீரோயினாக கியாரா அத்வானி கமிட்டாகியுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கியாரா அத்வானி தற்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.