/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/50_47.jpg)
'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானயஷ், 'கே.ஜி.எஃப் 2' பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இப்படம் வெளியாகி 1 வருடத்துக்கு மேல் ஆகியும் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார் யஷ். சமீபத்தில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பாலிவுட்டில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் ராவணனாக நடிக்க அவர் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய யஷ் தனது அடுத்த படம் குறித்து பேசினார். அவர் பேசுகையில், "மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை படம் பார்க்க செலவிடுகிறார்கள். அந்தப் பணத்தை நான் மதிக்கிறேன்.
எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் நீண்ட காலமாக கடினமாக உழைத்து வருகிறோம். நிச்சயம் அது அறிவித்த பின் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். அது மிக விரைவில் நடக்கும். நான் ஏற்கனவே கூறியது போல், அவர்களை மகிழ்ச்சியடையச் செய்வது எனது பொறுப்பு.அதை நிறைவேற்ற முயற்சிப்பேன்" என்றார். மேலும், "பாலிவுட்டிற்கு செல்லவில்லை" எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)