Advertisment

சீனாவில் படமாகும் பிரபுதேவா படம் 

prabhudeva

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ் .சிவராமன் தயாரிக்கும் படம் 'எங் மங் சங்'. இந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ராலட்சுமனன், கும்கி அஸ்வின் காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அறிமுக இயக்குனர் அர்ஜுன்.எம்.எஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படம் கும்பகோணம், பொள்ளாச்சி ஆகிய இடங்களைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சீனாவில் டெங் லெங் என்ற இடத்தில் ஏராளமான செலவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள். பிரபுதேவா வில்லன்லளுடன் மோதும் சண்டை காட்சிகளை சில்வா அமைக்க படமாக்கப் பட்டது. குங்பூ மற்றும் சைனீஸ் ஸ்டண்ட் பற்றிய காட்சிகள் கொண்ட படம் என்பதால் அதிக சிரத்தை எடுத்து படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 1980 கால கட்டத்தில் நடப்பது மாதிரியான கதைக்களத்தைக் கொண்ட படமாக எங் மங் சங் உருவாகிக் கொண்டிருக்கிறது.

prabhudeva yang mung chang
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe