ஜி.வி பிரகாஷுடன் இணைந்த தெருக்குரல் அறிவு... ட்ரெண்டாகும் ப்ரோமோ வீடியோ

yanaai movie promo song released

இயக்குநர்ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் யானை படத்தில் நடித்து வருகிறார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்கள்இருவரும் மாஃபியா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மேலும், பிரகாஷ் ராஜ், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபுஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'கே.ஜி.எஃப்' படத்தில் கருடனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராம் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f86733d5-4c92-41cd-8c27-625db29f4901" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad%20%281%29_10.jpg" />

இயக்குநர்ஹரிக்கேஉரித்தான கிராமத்துக் கதையை மையமாக கொண்டு ஆக்சன் படமாக இப்படம் எடுக்கப்படுகிறது. திருச்செந்தூர், பழனி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படக்குழு தற்போது " ஏலே போதையவிட்டு வாலே" பாடலின்ப்ரோமோவீடியோவைவெளியிட்டுள்ளது.இப்பாடலைஇசையமைப்பாளர் ஜி. வி பிரகாஷுடன் இணைந்து தெருக்குரல் அறிவு பாடியுள்ளார். இதன் முழு பாடல் நாளை(11.2.2022) காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது.

arun vijay GV prakash therukural arivu Yaanai
இதையும் படியுங்கள்
Subscribe