Advertisment

பலரது கவனம் பெற்ற 'யாத்திசை' - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

yaathisai ott release date update

Advertisment

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் தயாரிப்பில் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'யாத்திசை'. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராகப் போராடிய ஒரு சிறு தொல்குடியைப்பற்றிய கதைதான் 'யாத்திசை'. இப்படம் கடந்த மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படத்தை பார்த்த பலரும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர். படத்தின் காட்சிகள் பிரமாண்டமாகவும்படத்தில் பேசிய பழங்கால தமிழ் மொழி எனப் பல்வேறு அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி வருகிற 12 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை அமேசான் ப்ரைம் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ஒரு புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார்கள். அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பாராட்டைப் பெற்றதால் படம் பார்க்காத ரசிகர்கள் ஓடிடியில் பார்க்க ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.

amazon prime
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe