Advertisment

சிறந்த நடிகருக்கான விருது பெற்ற யாத்திசை நாயகன்

Advertisment

Yaathisai movie hero who won the best actor award

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ. கணேஷ் தயாரிப்பில் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருந்த திரைப்படம் 'யாத்திசை'. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராகப் போராடிய ஒரு சிறு தொல்குடியைப் பற்றிய கதைதான் 'யாத்திசை'. இப்படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியானது.

Advertisment

படத்தைப் பார்த்த பலரும் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்தனர். படத்தின் காட்சிகள் பிரமாண்டமாகவும், படத்தில் பேசிய பழங்கால தமிழ் மொழி எனப் பல்வேறு அம்சங்கள் ரசிகர்களைக் கவர்ந்தது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸாக அமேசானில் வெளியாகிஅங்கு ரசிகர்களால் பார்க்கப்பட்டுப் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நடந்த சிசர்ஸ் மெஸ்மரைசிங் அவார்ட்ஸ் 2023 நிகழ்வில் சிறந்த நடிகருக்கான விருது யாத்திசையில் நடித்த சேயோனுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டிருக்கிறது. படக்குழுவினருக்கும் நடிகருக்கும் சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

award function
இதையும் படியுங்கள்
Subscribe