Advertisment

'யானை' படத்தின் டீசர் அப்டேட்... உற்சாகத்தில் ரசிகர்கள் !

Advertisment

yaanai movie teaser release date announced

இயக்குநர்ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் யானை படத்தில் நடித்து வருகிறார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்கள்இருவரும் மாஃபியா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மேலும், பிரகாஷ் ராஜ், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபு ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே.ஜி.எஃப் படத்தில் கருடனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராம் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

Advertisment

இயக்குநர்ஹரிக்கேஉரித்தான கிராமத்துக் கதையை மையமாக கொண்டு ஆக்சன் படமாக இப்படம் எடுக்கப்படுகிறது. திருச்செந்தூர், பழனி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் யானை படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அப்படி அருண் விஜய் நடித்துள்ள யானை படத்தின் டீசர் வரும் 23 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. இதனையறிந்த ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர்.

arun vijay director hari Yaanai
இதையும் படியுங்கள்
Subscribe