yaanai movie second song released

இயக்குநர்ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் யானை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபுஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'கே.ஜி.எஃப்' படத்தில் கருடனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராம் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஜி விபிரகாஷ் இசையமைக்கிறார். யானை படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="e666f8ce-fa05-4d81-adf1-a3d0ca2b5437" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad%20%281%29_19.jpg" />

Advertisment

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்தற்போது " ஏலே போதையவிட்டு வாலே" என்ற இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கு தெருக்குரல் அறிவுவரிகள் எழுதி ஜி.வி பிரகாஷ் மற்றும் சந்தோஷ் ஹரிஹரன் ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார்.