Advertisment

கமலுக்காக அருண் விஜய் படக்குழு செய்த நெகிழ்ச்சியான செயல்

yaanai movie postpone july 1st

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யானை'. இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகிபாபு, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'கே.ஜி.எஃப்' படத்தில் கருடனாக நடித்த ராம் வில்லனாக நடித்துள்ள இப்படத்திற்கு ஜி வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வரும் 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் யானை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது. லோகேஷ் கனகராஜ்இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் படம் பெரும்வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் யானை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது. அதன்படி யானை படம் ஜூலை 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கமலின் விக்ரம் படத்திற்காக யானை படக்குழு செய்த இந்த நெகிழ்ச்சியான செயல் பலராலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisment

விக்ரம் படத்தின் வசூல் 300 கோடியை நெருங்குவதாகவும், இந்த ஆண்டு வெளியாகி தமிழில் அதிக வசூல் எட்டியுள்ள படங்களில் மூன்றாவது இடத்தில் விக்ரம் படம் இருப்பதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு இடங்களில் கே.ஜி.எஃப் 2 மற்றும் வலிமை படங்கள் இருக்கும் நிலையில் விரைவில் வலிமை படத்தின் ரிலீஸைமுறியடிக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துவருகின்றனர்.

ACTOR KAMAL HASSHAN Yaanai vikram movie arun vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe