arun vijay

ஹரி இயக்கத்தில் அருண்விஜய், சமுத்திரக்கனி, யோகி பாபு, ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'யானை'. இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, வில்லனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். திருச்செந்தூர், காரைக்குடி, பழனி, நாகப்பட்டினம், சென்னை என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்திய படக்குழு, இரண்டாம்கட்ட படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், சிறு இடைவெளிக்குப் பிறகு தற்போது மூன்றாம்கட்ட படப்பிடிப்பை படக்குழு தொடங்கியுள்ளது. யானை படம் தொடர்பான ஒரு புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அருண்விஜய், யானை படத்திற்கான மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இப்படம் நடிகர் அருண் விஜய்யின் 33ஆவது படமென்பதால் 33 திரைப்பிரபலங்கள் இணைந்து யானை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.