அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க, வில்லனாக மகிழ் திருமேனி நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். விவேக், மோகன் ராஜா, ரித்விகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 'முருகா' எனப் பெயரிடப்பட்டுள்ள பாடல், மார்ச் 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இத்தகவலை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.