Skip to main content

"இது ஆபாசப்படம் அல்ல... ஆபாசத்தை பற்றிய படம்" - 'x வீடியோஸ்' இயக்குனர்! 

Published on 31/05/2018 | Edited on 01/06/2018
xvideos


இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சஜோ சுந்தர் 'x வீடியோஸ்' என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளஇப்படத்தில் புது முகங்கள் அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், இந்தி என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நாளை ஜூன் 1ஆம் தேதி படம் வெளியாவதை முன்னிட்டு இப்படம் பற்றிய தகவல்களையும், படம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கான பதில்களையும் இயக்குனர் சஜோ சுந்தர் நம்மிடம் பகிர்ந்துகொண்டபோது....

 

 


"இன்று இணையதளத்தில் நிர்வாணப்படங்களை வெளியிட்டு சமூகத்தை சீரழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது 'x வீடியோஸ்' என்கிற இணையதளம். இந்த இணையதளம் மூலம் மக்களின் வாழ்க்கையில் எப்படி இவர்கள் விளையாடுகிறார்கள் என்பதைத்தான் இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறோம். அந்தவகையில் இது முழுக்க முழுக்க 'x வீடியோஸ்' என்கிற இணையத்தளத்திற்கு எதிரான படம். ரசிகர்களை ஈர்க்கும் விதமான தலைப்பாக இருக்கட்டும் என இந்த டைட்டிலை வைத்திருந்தாலும் கூட, 'x' என்றால் தவறு என்கிற கருத்தைத்தான் இதில் சொல்லியிருக்கிறோம். இது முழுக்க பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படத்தில் அரை நிர்வாண காடசிகள் இடம்பெற்றுள்ளன என்றாலும், அவை கூட கதையின் தேவை கருதி தானே தவிர, எதுவும் வலிந்து திணிக்கப்படவில்லை.

 

 

 

 


இயக்குனராக எனக்கு இது முதல் படம்.  இப்படத்தின் மூலம் வருமானம் சம்பாதிக்கவேண்டும் என்பது என் நோக்கம் கிடையாது. நான் செலவழித்த பணம் திரும்ப வந்தாலே அதுவே எனக்கு போதுமானது. இப்படத்தை பார்க்கும் மக்கள் இதன்பின்னராவது கொஞ்சம்  உஷாராகி விடுவார்கள் என்றால்  அதுதான் எனக்கு லாபம். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்துடன் இதனை ஒப்பிட வேண்டாம். அந்தப்படத்தை பார்ப்பதால் சும்மா சிரித்துவிட்டு போவதை தவிர வேறு என்ன லாபம் இருக்கிறது. ஆனால் இந்த 'x வீடியோஸ்' படத்தை பார்க்கிற ரசிகர்களுக்கு இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு தகவலும் லாபம். இது ஆபாசப்படம் அல்ல. ஆபாசத்தை பற்றிய படம். அசிங்கங்களை பேசுவது அசிங்கம் என் நாம் நினைத்துக்கொள்வதால்தான் நாட்டில் பல அசிங்கங்கள் நடக்கின்றன என்பதை குறிப்பிடுகிற படம் இது" என்றார்.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

பாலியல் புகாரில் சிக்கிய அமமுக வேட்பாளர் கதிர்காமுவுக்கு முன்ஜாமீன்!

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

பாலியல்  புகாரில் சிக்கிய அமமுக வேட்பாளர் கதிர்காமுவுக்கு உயர்நீதிமன்றம் கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

 

kathirkamu

 

பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவும் தற்போதைய அமமுக பெரியகுளம் வேட்பாளருமான கதிர்காமு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 2015-ல் அளித்த பாலியல் புகாரின் பேரில்  தற்போது 2019 ஏப்ரல் 8-ல் தேனி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் தற்போது முன்ஜாமீன் பெற்றுள்ளார்.  

 

தேர்தல் முடிந்தால் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்ஜாமீன் தரப்பட்டுள்ளது. 

 

சமூக வலைத்தளங்களில் கதிர்காமு தொடர்பான ஆபாச வீடியோ பரவிவருவது குறிப்பிடத்தக்கது.