Advertisment

மருமகனுக்காக அஜித் பட இயக்குநருடன் கைகோர்த்த ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர்!

Advertisment

Xavier Britto

நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளிக்கும், ‘மாஸ்டர்’ படத் தயாரிப்பாளர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு, ஆகாஷ் முரளி திரைத்துறையில் அறிமுகமாகும் திட்டத்தில் இருப்பதாகவும், அதற்கான முயற்சியை சேவியர் பிரிட்டோ எடுத்து வருவதாகவும் தகவல்கள் பரவின.

Advertisment

இந்தநிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார். இப்படத்தை நடிகர் அஜித்தை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளார். படத்தில் பணிபுரியவுள்ள பிற நடிகர்கள்மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனதயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Xavier Britto
இதையும் படியுங்கள்
Subscribe