Skip to main content

நடிகர் பொன்வண்ணனின் திருமண ரகசியம் குறித்து பகிரும் எழுத்தாளர் சுரா!

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

Ponvannan

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் பொன்வண்ணன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

மனிதர்கள் யாராக இருந்தாலும் உண்மையாக இருந்தால் அதற்கேற்ற வளர்ச்சி, அதற்கேற்ற பலன் நிச்சயமாக நமக்கு கிடைக்கும். உண்மையாக இருப்பது என்பது நல்ல குணமும்கூட. நடிகர் பொன்வண்ணனிடம் அந்த நல்ல குணம் உள்ளது. ஒரு சம்பவத்தை உங்களுக்கு உதாரணமாக கூறுகிறேன். நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணன் என்னுடைய நெருங்கிய நண்பர். தொடக்க காலங்களில் அன்னை வயல் என்ற படத்தை இயக்கினார். ஆனால், அந்தப் படம் பெரிய அளவில் ஓடவில்லை. பின்னர், தொலைக்காட்சி தொடர்கள் இயக்கம், தொடர்களில் நடிப்பது, சினிமாவில் நடிப்பது என அடுத்தடுத்த முயற்சிகள் செய்தார். 

 

பொன்வண்ணனின் உண்மையான பெயர் ஷண்முகம். சினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கு தனிப்பட்ட பி.ஆர்.ஓ போல நான் செயல்பட்டேன். நாங்கள் இருவரும் தினமும் சந்தித்து பேசிக்கொள்வோம். அவர் தேர்ந்த இலக்கிய ரசனை உடையவர் என்பதால் என்னுடைய மொழிபெயர்ப்பு படைப்புகளை அவருக்கு கொடுப்பேன். அதேபோல அவர் மிகச்சிறந்த ஓவியரும்கூட. நிறைய அற்புதமான ஓவியங்கள் வரைந்துள்ளார். அவருடைய ஓவியங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகர். பொன்வண்ணனின் ஓவியத்திறமை குறித்து 99 சதவிகித மக்களுக்கு தெரியாது. ஏன், திரைத்துறையில் இருப்பவர்களுக்கே தெரியாது. இவ்வளவு திறமை உடையவராக இருக்குறீர்கள். இதுவெல்லாம் வெளியே தெரியவில்லையே என்று அவரிடமே நான் கூறியிருக்கிறேன். தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள், ஓவியர்களை யாரும் கொண்டாடுவதில்லை. கேரளாவில் நம்பூதிரி என்று ஓவியர் ஒருவர் இருக்கிறார். மாத்ரு பூமியில் கதைகளுக்கு அவர் வரையும் ஓவியத்தை அந்த மக்கள் அவ்வளவு ரசிப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில் நடிகர்களையும் நடிகைகளையும்தான் மக்கள் ரசிக்கின்றனர். 

 

ஒருநாள், நானும் அவரும் பேசிக்கொண்டு இருக்கையில் இதுவரை யாருக்கும் கூறாத விஷயத்தை உங்களிடம் கூறுகிறேன் என்றார். நான் என்ன என்று கேட்க, நடிகை சரண்யாவை நான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்றார். அதைக் கேட்கும்போது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. இப்படி ஒரு எண்ணம் இருப்பதாக இதற்கு முன் அவர் வெளிக்காட்டியதே இல்லை. எப்போது திருமணம் என்றேன். இன்னும் இரண்டு மாதத்தில் என்றார். அந்த நேரத்தில் பொன்வண்ணனுக்கு பெரிய சம்பாத்தியம் எல்லாம் கிடையாது. அப்படியான சூழலில் சரண்யாவின் அப்பாவிடம் சென்று பொன்வண்ணன் பெண் கேட்டுள்ளார். மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய ஏ.பி.ராஜின் மகள்தான் நடிகை சரண்யா.  

 

அவரிடம் பெண் கேட்கையில், "சினிமாவில் நான் அசிஸ்டன்ட் டைரக்டரா ஒர்க் பண்ணிருக்கேன். டீவி சீரியல்களிலும் நடிச்சிருக்கேன். எதிர்காலத்தில் நிறைய படங்களிலும் நடிப்பேன். அதேபோல நிச்சயம் இயக்குநர் ஆவேன். இதெல்லாம் நடக்காமல் போனால்கூட என்னிடம் ஓவியம் வரையும் திறமை இருக்கிறது. அதை வைத்து சம்பாதித்து உங்கள் மகளை நல்லபடியாக பார்த்துக்கொள்வேன். எனவே உங்கள் பொண்ணை எனக்கு திருமணம் செய்துகொடுங்கள் எனத் திறந்த மனதுடன் கேட்டுள்ளார். நான் அப்படி ஆவேன் இப்படி ஆவேன் என்றெல்லாம் கூறாமல் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசிய பொன்வண்ணனின் இந்தப் பேச்சு சரண்யாவின் அப்பாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது. இரண்டு மூன்று நாட்களிலேயே அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அதன் பின், இருவருக்கும் திருமணம் நடந்து, இன்று நல்ல கணவன் மனைவியாக இருவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தரம் தாழ்ந்த மனநிலை”; அமீர் - ஞானவேல் பிரச்சனை குறித்து பொண்வண்ணன்!

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

ponvannan about ameer gnanavel raja paruthiveeran issue

 

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்திவீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை நடந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக நின்றனர். மேலும் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக காட்டமாக அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். 

 

இப்படி திரை பிரபலங்கள் ஒவ்வொருத்தராக இந்த விவகாரம் தொடர்பாக பேசி வரும் நிலையில், பருத்திவீரன் படத்தில் நடித்த பொண்வண்ணன், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “பருத்தி வீரன் திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞான வேலின் சமீபத்திய ஊடக பேட்டியைப்பார்த்தேன். அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல் , நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன். அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த  நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை. 

 

அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது, அமீர் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன்! பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு தொடர்ந்தது. ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்துக் கொண்டே இருந்தார். நானும்,உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதானப்படுத்திவிட்டு, டப்பிங்.. எடிட்டிங் ... ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான்  வேலை பார்த்தார். பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்ப்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது. 

 

இதனால் தான்,பணத்துக்காக தனது படைப்பிற்கு என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்ல முடியும். படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும், விமர்சனங்களாலும், வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும்  கிடைத்த தேசிய விருது அங்கீகாரங்களாலும் அது பெற்ற இடமோ உயரியது. படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும் ,திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும் , பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில் , தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் .

 

உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக ..திருடன், வேலைதெரியாதவர்.. என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..! அந்த ஊடக பேட்டி முழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத் திமிரும், வக்கிரமாக இருந்தது..! தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும், அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..!

 

இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.! பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும்,உறவும் மீண்டும் மலரவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

 

 

Next Story

"தியாகம் செய்யும் போது தான் உண்மையான விவசாயியாக இருக்க முடியும்" - பொன்வண்ணன் 

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

actor ponvannan talks about true farmers sacrifice  

 

சென்னையில் நடிகர் கார்த்தி நடத்தும் உழவன் பவுண்டேசன் ஒருங்கிணைத்த உழவர் விருது 2023 வழங்கும் விழாவில் பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் கலந்து கொண்டார்கள். பல்வேறு நபர்களைப் பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் பொன் வண்ணன் பேசியதாவது...

 

"நீண்ட நெடிய பாரம்பரியமிக்க விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். அந்த விவசாய குடும்பத்தில் முதலில் படித்த பையனும் நான். படிப்பு என்பது பள்ளி பாட புத்தகத்தை தாண்டியும் நூலகமே கதி என்று இருந்தவன். அது ஒரு முரண்பாடான வாழ்க்கை. என்னுடைய தந்தை கிராமத்துச் சூழலில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர். விண்மீன்களின் நகர்வுகளையும், பறவைகளின் ஒலிகளையும் வைத்து நேரத்தைக் கணக்கிடும் அளவுக்கு இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்.

 

அவரிடம் பெரும்பாலும் மூணு அல்லது நாலு வேட்டி தான் இருக்கும். என்னுடைய அப்பாவை நான் பெரும்பாலும் கோவணத்தோடு தான் பார்த்து உள்ளேன். அவர்  எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என்றாலும், அந்த கோவணத்தின் மேல் ஒரு வேட்டியை கட்டிக்கொண்டு தோளில் துண்டை போட்டுக்கொண்டு செல்வார். மாட்டு வண்டியில் போகும் கிராம வாழ்க்கை சூழல் இருந்தது. என்னுடைய அம்மா காலை நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து சமையல் வேலைகள் எல்லாம் முடித்து விட்டு காலை ஆறு மணிக்கு எல்லாம் வீட்டை விட்டு சென்று விடுவார்.

 

மாலை நாலு மணிக்கு எல்லாம் பள்ளி முடிந்து வரும் போது நேராக தோட்டத்திற்குச் சென்று அங்கு அம்மாவிற்கு உதவியாக அங்குள்ள வேலைகளைச் செய்வேன். புதன்கிழமை அன்று எங்கள்  ஊரில் சந்தை கூடும் நாட்களில் காய்கறிகளை எங்க அம்மா தலையில் சுமந்து கொண்டு செல்வார். அவருக்கு பின்னாலேயே நானும் காய்கறிகளைச் சுமந்து கொண்டு செல்வேன். இப்படி செல்லும் போது பள்ளி நண்பர்கள் யாராவது நம்மை பார்த்து விடுவார்களா என்று நினைத்துக் கொண்டே செல்வேன். இவ்வாறு செல்வதை சில சமயங்களில் கௌரவ பிரச்சனையாகக் கூட கருதி இருக்கிறேன்.

 

வயது வயது கூடக் கூட எனக்கு விவசாயம் ஒத்து வரவில்லை. படிப்பும் கனவும் என்னை வேறு பக்கம் இழுத்துச் சென்றது. கம்யூனிச வாழ்க்கை, நாடகத்துறை, திரைத்துறை என  வந்த பிறகும் கூட என்னுடைய அப்பா கடைசி வரைக்கும் விவசாய சூழலில் இருந்து மடிந்து விட்டார். ஆனால் என்னுடைய படிப்பு கற்று கொடுத்தது விவசாயத்தை விட்டு விட்ட நீ ஒரு முட்டாள் என்று. அதற்குள் வாழ்க்கை சூழல் மாறிவிட்டது. நான் மீண்டும் கிராமத்திற்குச் செல்லும் போது எதை இழந்தேனோ அதை  உறவினர்கள்  மற்றும்  நட்பின் மூலம்  அதை மீண்டும் பெற முயற்சிக்கிறேன்.

 

மனித இனம் கண்டுபிடித்த மிக கொடூரமான, பரிதாபமான ஒரு தேர்வு முறை விவசாயம். விவசாயம் என்பது மற்ற தொழில்களை போன்று சாதாரணமானது  இல்லை. இயற்கையோடு இணைந்து பயணிக்க வேண்டி இருக்கிறது. வியாபாரத்தோடு இழப்புகளையம் சந்திக்க வேண்டி இருக்கிறது. பிரசவத்தில் ஆடு, மாடு இறந்து போவதைப் பார்த்து இருக்கிறேன். வறட்சியால் பயிர்களை மாடுகளை விட்டு மேய்ப்பதை பார்த்து இருக்கிறேன். ஆனால் அதற்காக எல்லாம் என் தந்தை வீட்டையோ, சமையல் அறையையோ மாற்றியது இல்லை. நிலத்தை வியாபாரத் தன்மையோடு அடையாளம் காட்டும் சூழல் வந்து விட்டது. இளைஞர்கள் முகநூலில் விவசாயத்தை பற்றி பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் விவசாயம் செய்வது என்பது  ஒருவர் தனது வாழ்க்கையை தொலைத்து விட்டு பெரிய தியாகம் செய்யும் போது தான் உண்மையான விவசாயியாக இருக்க முடியும்" என்றார்.