
'அட்டகத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித், ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து, தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' என்ற படத்தையும் தயாரித்து வெற்றி கண்டார். தற்போது நடிகர் ஆர்யாவை வைத்து 'சார்பட்டா பரம்பரை' படத்தை இயக்கும் பணிகளில் மும்மரமாக உள்ள ரஞ்சித், தன்னுடைய அடுத்த படத் தயாரிப்பு குறித்து ஒரு அறிவிப்பினை சென்ற டிசம்பர் மாதம் வெளியிட்டார்.
கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ப்ரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 'ரைட்டர்' எனப் பெயரிடப்பட்டது. சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)