Advertisment

இயக்குநர் பா.ரஞ்சித்தின் படத்தை கைப்பற்றிய அல்லு அர்ஜுனின் தந்தை?

Advertisment

writer movie released on allu arjun aha ott platform

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர்ப்ராங்க்ளின் ஜேக்கப் 'ரைட்டர்' படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி போலீசாக நடித்துள்ளார்.திலீபன், இனியா, சுப்ரமணிய சிவா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.ஒரு நேர்மையான போலீசுக்கு சமூகத்திலும் தனது அலுவலகத்திலும் ஏற்படும் பிரச்சனைகளைபேசியுள்ள இப்படம் வெளியாகி பலரின் பாராட்டுகளை பெற்றது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை தெலுங்கின்முன்னணி ஓடிடி நிறுவனமான 'ஆஹா' கைப்பற்றியுள்ளது. பிரபல தயாரிப்பாளரும் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் நடத்தும் 'ஆஹா' ஓடிடி தளம் தமிழில் வரவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனைத்தொடர்ந்து 'ரைட்டர்' திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகஇருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

allu arjun pa.ranjith samuthirakani writer
இதையும் படியுங்கள்
Subscribe