தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித், தன்னுடைய நீலம் ப்ரொடக்சன்ஸ் மூலம் படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தயாரிப்பில் வெளியான 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு' ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், நீலம் ப்ரொடக்சன்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 'ரைட்டர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் பிராங்களின் ஜேக்கப் இயக்குகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ள பா. ரஞ்சித், "மனித மனங்களின் தீராத அதிகார வேட்கைக்குப் பலியாகும் எளிய மனிதர்களின் எழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த ரைட்டர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மனித மனங்களின் தீராத அதிகார வேட்கைக்கு பலியாகும் எளிய மனிதர்களின் எழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த #writer ✍️@thondankani@thehari___@officialneelam@GRfilmssg@LRCF6204@Tisaditi@PiiyushSingh@abhay_VMC@frankjacobbbb@doppratheep@govind_vasanthapic.twitter.com/u5PFR5c9tC
— pa.ranjith (@beemji) April 14, 2021