Advertisment

ஐந்து மொழிகளில் வெளியாகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் படம்

Witness trailer gets good response

விக்ரம் வேதாபடத்தின் மூலம் பிரபலமான ஷ்ரத்தா ஸ்ரீநாத், தொடர்ந்து 'கே-13', 'நேர்கொண்ட பார்வை', 'மாறா' 'சக்ரா' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழைத்தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisment

இதனிடையே முதல் முறையாகத்தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் அனுபவ நடிகை ரோகிணியுடன் இணைந்து 'விட்னஸ்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'தி பீப்பிள் மீடியா ஃபேக்டரி' வழங்கும் இப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். தீபக் இப்படத்தை இயக்கியதோடு ஒளிப்பதிவும் செய்கிறார். இப்படத்தின்ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே மாதம் வெளியானது.

Advertisment

இந்நிலையில் 'விட்னஸ்' படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. ட்ரைலரை பார்க்கையில், தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டும் மெட்ரோ நகரங்களின் மறுபக்கத்தையும் விரிவாக விவரித்துள்ளது போல் தெரிகிறது. இப்படம் டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

Rohini shraddha srinath
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe