விஜய் ஆண்டனியின் 'நான்' திரைப்படத்தில் 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடலை எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின்தான். இதனை தொடர்ந்து விஸ்வாசம், அண்ணாத்த படங்களுக்கு புரோமோ பாடல்கள் எழுதியுள்ளார். அப்பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும் ஜெயலலிதாவின் இரங்கல் பாடலையும் எழுதியுள்ளார்.
இந்நிலையில் 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' என்ற ஆல்பம் பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார். இப்பாடலை இலங்கையின் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சனுக விக்கிரமசிங் இசையமைத்துப் பாடியுள்ளார். இப்பாடல் கணவனால், காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் வலியை விவரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பாடல் அனைத்து இசை ரசிகர்களாலும் கவனம் பெற்று ரசிக்கப்பட்டு வருகிறது.