கதை நன்றாக இருக்குமா? ; குழம்பியே நடித்து முடித்த ஜெய்!

 Will the story be good? Jay ended up acting confused

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில்,'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் 'தீராக் காதல்'. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வில் நடிகர் ஜெய் பேசியதாவது, “இந்தப் படத்தின் கதையை, கதையாகக் கேட்கும்போது நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்கு நன்றாக இருக்குமா? என்று ஒரு குழப்பம் இருந்தது.ஆனால் எனக்கு இயக்குநர் மீது நம்பிக்கை இருந்தது. அவரது அதே கண்கள் படத்தை 4 முறை பார்த்துள்ளேன். இந்த மாதிரி இயக்குநரிடம் பணிபுரிய வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நடந்தது சந்தோஷம். ஒளிப்பதிவாளர் ரவி என்னை இந்தப் படத்தில் அழகாகக் காண்பித்துள்ளார். பாடல்களும், இசையும் அருமையாக வந்துள்ளது”.

மேலும், “சித்துவின் ரசிகன் நான். இந்தப் படம் அனைவருக்கும் தங்களுடைய சொந்த வாழ்வில் நடக்கும் நிகழ்வைப் போல் இருக்கும்.இதற்காக மொத்த குழுவும் கடுமையாக உழைத்துள்ளனர். ரோகின் ஒரு மிகப்பெரும் புத்திசாலி அவருடைய பணி தனித்துவமாக இருக்கும்.படத்தில் இரண்டு நடிகைகளும் சிறப்பாக நடித்துள்ளனர்.ஐஸ்வர்யாவின் பெரும் ரசிகன்.தயாரிப்பாளர் லைகா தமிழ் குமரனுக்கு நன்றி.ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் நன்றி.படம் பார்த்து விட்டு நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்” என்றார்.

jai PRESS MEET Theera kaadhal
இதையும் படியுங்கள்
Subscribe