Advertisment

மும்பையில் வில் ஸ்மித்... வைரலாகும் புகைப்படங்கள்

Will Smith arrives Mumbai Kalina airport

94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா சமீபத்தில்அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருது 'கிங் ரிச்சர்ட்' படத்திற்காக வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் தனது மனைவியை கிண்டல் செய்த தொகுப்பாளர்கிறிஸ்ராக்கை வில் ஸ்மித் ஆஸ்கர் மேடையில் வைத்தேகன்னத்தில் பளார் அறைந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இதனைத் தொடர்ந்து தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்த வில் ஸ்மித் ஆஸ்கர் அகடாமியிடமும்மன்னிப்புக் கோரினார். இருப்பினும் அகாடமியின் நடத்தை விதிகளை மீறியுள்ளதாக கூறி வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் பங்கேற்க தடை விதித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் ஆஸ்கர் சர்ச்சைக்கு பிறகு நடிகர் வில் ஸ்மித் இன்று இந்தியா வந்துள்ளார். ஆனால் இந்தியா வந்ததற்கான காரணங்கள் வெளியாகாத நிலையிலும்மும்பை கலீனா விமான நிலையத்தில் நடிகர் வில் ஸ்மித்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் விடியோக்கள்சமூக வலைதளத்தில் வெளியாகிவைரலாகி வருகிறது.

Maharashtra Mumbai will smith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe