/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/151_9.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர்
நடிப்பில் உருவான 'விக்ரம்' திரைப்படம், கடந்த 3ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், கமல்ஹாசனும், லோகேஷ் கனகராஜும் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அந்த நிகழ்வில் மக்களிடம் படங்களைக் கொண்டு சேர்த்ததற்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த இருவரும், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.
மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிப்பீர்களா, அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜே இயக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த கமல்ஹாசன், ”அதற்கு ரஜினியும் லோகேஷ் கனகராஜும்தான் பதில் சொல்ல வேண்டும். முதலில் ரஜினியிடம் கேட்க வேண்டும். அவர் ஒத்துக்கொண்டால் லோகேஷிடம் கேட்க வேண்டும். நான் எப்போதுமே அதற்குத் தயாராகவே இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)