Advertisment

மறைந்த நா.முத்துகுமார் பாடலுக்கு தேசிய விருது...? 

petti kadai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'பெட்டிக்கடை'. இப்படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா மற்றும் வர்ஷாவும் நடிக்கிறார்கள். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத், ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமார் எழுதிய "சுடல மாட சாமிக்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட சொல்லு புள்ள " என்ற பாடல் யூ டியூப் ரசிகர்களால் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பாராட்டு மழையால் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே நிறைய தேசிய விருதுகளை நா.முத்துகுமார் பெற்றிருந்தாலும் அவருக்கு இந்த பாடலுக்காகவும் தேசிய விருது கிடைக்கும் என்று படக்குழு சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது. படம் வரும் 22ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.

Advertisment

na muthukumar samuthirakani samuthrakani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe