Advertisment

“பிரபலமான படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார்” - பிரதமர் மோடி இரங்கல்

publive-image

சரத்பாபு அவரது படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார் என பிரதம மோடி புகழாரம் சூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சரத்பாபு. இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய 'பட்டினப் பிரவேசம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,

Advertisment

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. பின்பு அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இத்தகவலுக்கு விளக்கமளித்த அவரது குடும்பத்தினர் உடல்நிலை தேறி வருவதாகக் கூறினர். இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு தற்போது உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. இவரது மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி அவரது ட்விட்டரில் “சரத்பாபுபடைப்பாற்றல் மிக்கவர். அவரது நீண்ட திரைப்பட வாழ்க்கையில் பல மொழிகளில் பல பிரபலமான படைப்புகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.

pm modi sarathbabu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe