/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/447_3.jpg)
விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
மறுபுறம் மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் 'துணிவு'. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இரு படங்களின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இரு திரைப்படங்களின் ட்ரைலர்களும் வெளியாகி யூடியூபில் சக்கைப் போடு போடுகின்றன.
இந்நிலையில்,துணிவு படத்தின்ரிலீஸ் தேதி இன்று வெளியானது. அதன்படிஜனவரி 11ல் வெளியாகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வாரிசு திரைப்படத்தின்ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாரிசு படமும் ஜனவரி 11ல் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)