Advertisment

அரசியல் காரணமாக காதலனுடன் பிரேக்கப் செய்த நடிகை திவ்யா!

குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா. இவரின் உண்மையான பெயர் திவ்யா ஸ்பந்தனா. கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பிறந்தவரான இவர் தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தார்.

Advertisment

divya spandana

கடந்த 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கடந்த 2014ஆம் ஆண்டு மாண்டியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியும் அடைந்தார்.

இதன்பின் காங்கிரஸின் சமூக வலைதள பிரிவின் தலைவியாக செயல்பட்டுவந்தார். பாஜகவை மிகவும் கடுமையாக விமர்சித்தார். சமீபத்தில் இந்த பதிவியிலிருந்து விலகிக்கொண்டார். நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பிறகு திவ்யாவின் பேச்சு சமூக வலைதளத்தில் குறைந்துவிட்டது.

Advertisment

இந்நிலையில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ரபேலுடன் திவ்யாவுக்கு துபாயில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவின. இதற்கு ரம்யாவின் தாய் ரஞ்சிதா விளக்கமளித்துள்ளார். “தற்போது ரம்யா திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை. திருமணம் குறித்து ரம்யா முடிவு செய்தால் அதுபற்றி வெளிப்படையாக கூறுவோம். அவருடைய திருமணத்தை மூடிமறைத்து ரகசியமாக நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

ரம்யா திருமணம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். ரம்யா அரசியலில் கவனம் செலுத்தியபோது, ரபேல் தனது தொழிலில் கவனம் செலுத்தினார். இதனால் அவர்கள் அதிகமாக சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. மேலும் ரம்யாவுக்கு இந்தியாவை விட்டு செல்ல விருப்பம் இல்லை. ரபேலுக்கு போர்ச்சுக்கல் நாட்டை விட்டு வரவும் மனமில்லை. இதுபோன்ற காரணங்களினால் 2 பேரும் பரஸ்பரம் பேசி பிரிந்தனர். இருப்பினும் அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். அவருடைய குடும்பத்தினரும், நாங்களும் தொடர்பில் தான் இருக்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.

congress divya sapndana
இதையும் படியுங்கள்
Subscribe