Advertisment

ஜெயிக்கப் போவது யாரு?- ஃபைனலை நெருங்கிய 'சூப்பர் சிங்கர் சீனியர்-சீசன் 10'  

Who Will Win?- 'Super Singer Senior-Season 10' Closer to Finals

Advertisment

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10சீசன், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பலதரப்பட்ட பாடகர்கள் கலந்துகொள்ள, களைகட்டிய இந்த சீசனின் இறுதிப் போட்டி, ஐந்து இறுதிக்கட்ட போட்டியாளர்களுடன், வரும் ஜூன் 23 ஞாயிறு அன்று நேரு உள் விளையாட்டரங்கில் கோலாகலமான கொண்டாட்டத்துடன் நடைபெறவுள்ளது.

பாடகர்கள் விக்னேஷ், ஜீவிதா, ஜான் ஜோ, வைஷ்ணவி, ஸ்ரீனிதி, ஆகிய ஐந்து ஃபைனலிஸ்ட்ஸ் ஃபைனலில் கலந்துகொள்ளவுள்ளனர். விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான திறமையாளர்கள், சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த் திரையுலகிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஜொலித்து வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும்,சிறு வயதினருக்குமாக நடைபெற்று வருகிறது. முன்னெப்போதையும் விட இந்த முறை நடந்த சூப்பர் சிங்கர் சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10 வது சீசன், பாடகர்களுக்கான முன்கூட்டிய திரைப்பட வாய்ப்புகள், சர்ப்ரைஸ் தருணங்கள், பிரபலங்களின் வருகை, நெகிழ்வான சம்பவங்கள் எனக் களை கட்டியது. பல அற்புத தருணங்கள் நிறைந்த இந்த சீசன் மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.

Advertisment

இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றனர். இந்த சீசனில் கலந்து கொண்ட கானா மணிகண்டனுக்கு, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் நிகழ்ச்சி முடிவடையும் முன்னதாகவே, திரைப்படத்தில் பாடல் பாடும் வாய்ப்பை வழங்கினார். மேலும் டாப் 10 இடம் பிடித்த திறமையாளர்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழகுவதாக உறுதி அளித்துள்ளார். பாடகர் மனோவின் 40 வருட திரை வாழ்வைக் கொண்டாடும் விதமாக நடந்த சிறப்பு நிகழ்ச்சி, மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.

பல திறமையாளர்களுக்கான அடையாளமாக மாறி, பல அற்புத தருணங்களால் களைகட்டிய சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 ஃபைனல்ஸ் வரும் ஜூன் 23 ஞாயிறு மாலை நேரு உள் விளையாட்டரங்கத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. பலதரப்பட்ட பின்னணியிலிருந்து கலந்துகொண்டு தங்கள் திறமையால் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள விக்னேஷ், ஜீவிதா, ஜான் ஜோ, வைஷ்ணவி, ஸ்ரீனிதி, ஆகிய ஐந்து ஃபைனலிஸ்ட்ஸ் கலந்துகொள்ளும் ஃபைனல்ஸ் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

song
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe