Skip to main content

ஜெயிக்கப் போவது யாரு?- ஃபைனலை நெருங்கிய 'சூப்பர் சிங்கர் சீனியர்-சீசன் 10'  

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Who Will Win?- 'Super Singer Senior-Season 10' Closer to Finals

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10 சீசன், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பலதரப்பட்ட பாடகர்கள் கலந்துகொள்ள, களைகட்டிய இந்த சீசனின் இறுதிப் போட்டி,  ஐந்து இறுதிக்கட்ட போட்டியாளர்களுடன், வரும் ஜூன் 23 ஞாயிறு அன்று நேரு உள் விளையாட்டரங்கில் கோலாகலமான கொண்டாட்டத்துடன்  நடைபெறவுள்ளது.

பாடகர்கள் விக்னேஷ், ஜீவிதா, ஜான் ஜோ, வைஷ்ணவி, ஸ்ரீனிதி, ஆகிய ஐந்து ஃபைனலிஸ்ட்ஸ் ஃபைனலில் கலந்துகொள்ளவுள்ளனர்.  விஜய் டிவியில்,  பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை  ஏற்படுத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான திறமையாளர்கள்,  சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த் திரையுலகிலும்  பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஜொலித்து வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர்  என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும்,சிறு வயதினருக்குமாக நடைபெற்று வருகிறது.  முன்னெப்போதையும் விட இந்த முறை நடந்த சூப்பர் சிங்கர் சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10 வது சீசன், பாடகர்களுக்கான முன்கூட்டிய திரைப்பட வாய்ப்புகள்,  சர்ப்ரைஸ் தருணங்கள், பிரபலங்களின் வருகை, நெகிழ்வான சம்பவங்கள் எனக் களை கட்டியது. பல அற்புத தருணங்கள் நிறைந்த இந்த சீசன் மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிகழ்ச்சியில்  பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்  ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றனர். இந்த சீசனில் கலந்து கொண்ட கானா மணிகண்டனுக்கு, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் நிகழ்ச்சி முடிவடையும் முன்னதாகவே, திரைப்படத்தில் பாடல் பாடும் வாய்ப்பை வழங்கினார்.  மேலும் டாப் 10 இடம் பிடித்த திறமையாளர்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழகுவதாக உறுதி அளித்துள்ளார். பாடகர் மனோவின் 40 வருட திரை வாழ்வைக் கொண்டாடும் விதமாக நடந்த சிறப்பு நிகழ்ச்சி, மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.  

பல திறமையாளர்களுக்கான அடையாளமாக மாறி, பல அற்புத தருணங்களால் களைகட்டிய  சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 ஃபைனல்ஸ் வரும் ஜூன் 23 ஞாயிறு மாலை நேரு உள் விளையாட்டரங்கத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. பலதரப்பட்ட பின்னணியிலிருந்து கலந்துகொண்டு தங்கள் திறமையால் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள விக்னேஷ், ஜீவிதா, ஜான் ஜோ, வைஷ்ணவி, ஸ்ரீனிதி, ஆகிய ஐந்து ஃபைனலிஸ்ட்ஸ் கலந்துகொள்ளும் ஃபைனல்ஸ் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

‘குத்தாட்டம் போடும் விக்ரம் - பார்வதி’; தங்கலான் பட அப்டேட்டை கொடுத்த படக்குழு

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
thangalaan first single promo released

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில், பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இதற்கிடையில், இப்படத்தின் டிரெய்லர் கடந்த 10ஆம் தேதி வெளியானது. அதில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம் தங்கம் எடுப்பதற்காக அடிமைப்படுத்தப்படுகிறார்கள் போல் தெரிந்தது. அதன் மூலம் வரும் பிரச்சனை தான் இப்படத்தின் கதை என்று யூகிக்க முடிந்தது.  இந்த டிரெய்லரில் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை மிகவும் ரசிக்கக் கூடிய வகையில் இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த டிரெய்லரின் மூலம் இப்படம் தொடர்பாக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் தொடர்பான அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதில், ‘மினிக்கி மினிக்கி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள பாடல் வரும் 17ஆம் தேதி லிரிக்கல் வீடியோ வெளியாகும் எனக் குறிப்பிட்டு ஒரு புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், விக்ரம், அவரது ஜோடியான பார்வதி மற்றும் அவர்கள் சார்ந்த மக்கள் பாடி ஆடுவது போல் அமைந்திருக்கிறது. கேட்ட உடனேயே ரசிக்கக்கூடிய இப்பாடலை சிந்துரி விஷால் பாடியிருக்கிறார். இப்படத்தின் இடம்பெறும் பாடலும், பின்னணி இசையும் பெரிதாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மத்திய அரசை விமர்சித்து பா.ஜ.க.வினர் வெளியிட்ட பிரச்சார பாடலால் பரபரப்பு!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
The propaganda song released by the BJP criticizing the central government caused a stir

கேரளா மாநிலத்தின் பா.ஜ.க தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் கே.சுரேந்திரன். இவர் மாநிலம் முழுவதும், ‘கேரள பாதயாத்திரை’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், மாநிலம் தழுவிய இந்த நடைபயணத்திற்காக கேரளா பா.ஜ.க சார்பில் ஒரு பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது. 

அந்த பாடலில், ஊழல் நிறைந்த மத்திய அரசுக்கு எதிராக போராட வருமாறு மக்களுக்கு அழைக்கு விடுக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பாடலை, கேரள பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் பகிரப்பட்டது. மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இடம்பெறும் இந்த பாடலை கேரள பா.ஜ.க வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, அந்த பாடல் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், அதற்குள் அந்த பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.