Skip to main content

பிராட்வே படத்தின் கதாநாயகன் யார்? ரகசியம் காக்கும் படக்குழு!

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

Who is the hero of the Broadway movie

 

பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிமுக இயக்குநர் வீரேஷ் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது.  இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  படத் தயாரிப்பு நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் டைட்டில் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

 

இப்படத்திற்கு 'பிராட்வே' என பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகன்  உள்பட படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் தொடர்பான  விவரங்களை படக்குழு வெளியிடவில்லை.  இதனால் படத்தின் கதாநாயகன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் ஏதாவது முன்னணி நடிகர்கள் படமாக இருக்குமா  என்றும்  ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்