/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-18_0.jpg)
தமிழில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் அசோக் செல்வனும் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ஹாஸ்டல்'. ஆர்.ரவீந்திரன் தயாரித்திருந்த இப்படத்தில் பிரியா பவானிசங்கர், சதீஷ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். காமெடி கலந்த திகில் ஜானரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனை அடுத்து 'கே 4 க்ரியேஷன்' சார்பாக கேசவன் தயாரிக்கும் 'வேழம்' படத்தில் நடித்துள்ளார். ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சந்தீப் ஷ்யாம் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜானு சந்தர் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'வேழம்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கொடூரமாக ஒரு கொலை நடக்கிறது, அந்த கொலையாளி யார்? அவனை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை த்ரில்லிங்காக சொல்வது போல் இந்த ட்ரைலர் வெளியாகியுள்ளது. மேலும் சமூக வலைத்தளத்தில் இந்த ட்ரைலர் வைரலாகி வருகிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)