Published on 02/04/2024 | Edited on 02/04/2024

கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ், விஜித் நடித்துள்ள திரைப்படம் “ஒயிட் ரோஸ்”. இத்திரைப்படத்தின் டிரைலர் மார்ச் மாதம் 23-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஒரு பாடலான “I’ve Arrived நானே வந்தேன்” எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்பாடலை நடிகர் ஆர்யா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டு “பவர்ஃபுல் சாங்” என பாடலை பாராட்டி நெகிழ்ந்துள்ளார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கியுள்ளார். பர்மா,என்னோடு விளையாடு, ஒரு கோடை மர்டர் மிஸ்டரி படங்களுக்கு இசையமைத்த சுதர்ஷன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.