'This is where we will appreciate our Tamil knowledge' - sibiraj trailer that talks about God and science

'ரங்கா' படத்திற்குப் பிறகு சிபிராஜ் நடித்திருக்கும் படம் 'மாயோன்'. கிஷோர் என்பவர் இயக்கியிருக்கும் இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். 'டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்' சார்பாக அருண் மொழி மாணிக்கம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஒரு பழமையான கோவிலின் பின்னணியில் நடக்கும் வகையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் இரு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'மாயோன்' படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடவுள், அறிவியல், மற்றும் தமிழரின் கலை உள்ளிட்ட பல விஷயங்களை பற்றி பேசுவது போல் வெளியாகியுள்ள இந்த ட்ரைலர் யூ-ட்யூபில் தற்போது வரை 1-மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இப்படம் ஜூன் 17-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு வருகிற ஜூன் 24-ஆம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது.

Advertisment