Advertisment

கே.கே-வின் மரணத்திற்கு காரணம் என்ன? - வெளியான உடற்கூராய்வு அறிக்கை

What was the cause of KK's death? - Released doctors report

Advertisment

கிருஷ்ணகுமார் குன்னத், தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சமீபத்தில் கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது, அங்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு சோகத்தையும் ஏற்படுத்தியது. இதனிடையே கே.கே-வின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கொல்கத்தா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்பு உடற்கூராய்வில் மாரடைப்பால் தான் உயிரிழந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து கே.கே-வின் உடல் மும்பையில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மறைந்த கே.கே-வின் உடற்கூராய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், கே.கே-வின் உடலில் இதயத்திற்கு செல்லும் கரோனரி தமனியில் 80 சதவீத அடைப்பு இருந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் கே.கே மிகவும் உற்சாகம் அடைந்துள்ளதால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துள்ளார். அவருக்கு உடனடியாக சிபிஆர் சிகிச்சை அளித்திருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு உண்டு என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

singer kk
இதையும் படியுங்கள்
Subscribe