Advertisment

'கே.ஜி.எப் 2' படத்தின் மொத்த நீளம் எவ்வுளவு? - வெளியான புதிய தகவல்

What is the total length of 'KGF2'? - New information out

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான 'கே.ஜி.எப் 2' ஏப்ரல் 14-ல் பிரம்மாண்டமாக திரைக்கு வரவிருக்கிறது. ஐந்து மொழிகளில் வெளியாகும் இப்படத்தில் யாஷ் ஹீரோவாக நடித்துள்ளார். யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், மற்றும் மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தினுடைய ட்ரைலர் வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

படத்தினுடைய ப்ரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தை பற்றி சென்சார் மற்றும் மொத்த நீளம் குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளது. அதன் படி 'இரண்டு மணி நேரம் நாற்பத்தி எட்டு நிமிடங்கள்' ஓடக்கூடிய இப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. 'கே.ஜி.எப் 1' பட வெற்றிக்கு பிறகு பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார். 2018-ல் வெளியான 'கே.ஜி.எப் 1' படம் 'இரண்டு மணி நேரம் முப்பத்தி ஐந்து நிமிடங்கள்' என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

kgf 2 yash
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe