Advertisment

“இன்னைக்கு வரைக்கும் வருத்தம் என்னனா?”- புலம்பித் தீர்த்த ஆர்.கே.சுரேஷ்

publive-image

அதர்வா நடிப்பில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள 'பட்டத்து அரசன்' படத்தின் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

Advertisment

அப்போது பேசிய திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், "பட்டத்து அரசன் டைட்டில் கேட்கும் போதே, டைரக்டர் சற்குணம் பங்காளிகிட்ட நல்லாருக்குனு சொல்லியிருந்தேன். அப்பறம் நான் கேட்டேன் யாரு ஹீரோனு.அதர்வா தான் பங்காளினு சொன்னாரு. அப்ப உண்மையிலே தம்பிக்கு கரெக்ட்டா இருக்கும்னு சொன்னேன். 1986-ல எங்க அப்பா தயாரிச்ச முதல் படத்துல நடிச்சது முரளி சார். உங்களுக்கு தெரியுமானு தெரியாது.இப்ப தான் சொல்றன். அப்ப நான் ரொம்ப குட்டி பையன். சினிமா சூட்டிங்க்குபோவேன். அப்போது, முரளி சரோடு உட்கார்ந்து சாப்பிடறது,அப்பறம் அவர் எங்க வீட்டுக்கு வரது, அந்த மாதிரிலாம் இருந்துச்சு.

Advertisment

எதுக்குங்க...நம்ம சொத்தெல்லாம் போயிடும்னு எங்க அம்மா திட்டிட்டே இருப்பாங்க. இன்னையகாலகட்டங்களில் இருக்கும்சினிமா வேற, அப்ப இருந்த காலகட்டங்களில் இருந்த சினிமா வேற. நாம் பார்த்த விதமே வேற. ராஜ்கிரண் சாருக்கு அதெல்லாம் தெரியும். அடிக்கடி தம்பிட்ட பேசுவேன். என் சொந்த தம்பி மாதிரி தான் நினைப்பேன். இன்னைக்கு வரைக்கும்,தம்பி நீங்க வந்து யூத்-ஆ பண்ணுங்க. ஃப்ரெஷ்ஆர்ட்டிஸ்ட் அவரு. அவர் அடுத்தடுத்த கட்டத்திற்குக் கண்டிப்பா போயிட்டு இருக்காரு. அவரது முதல் படமே நூறு நாள் ஓடிய படம்.

ராஜ்கிரண் அப்பா, இனிஷியலாடிஸ்ட்ரிபியூட்டர் ஆகி, புரொடியூசர் ஆகி, அப்பறம் ஆக்டரா வந்தாரு ஐயா. அப்ப இருந்தே அவர் மேல பெரிய மரியாதை எனக்கு. ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன் சார்ட்ட ராஜ்கிரண் சார் மாதிரியே அந்த ஒரு பஞ்ச் எனக்கு கத்துக்கொடுங்க சாருனு கேட்பேன். அவர் ஃபோர்ஸ் கொடுக்கறத மூஞ்சிலேயே காட்டிடுவாரு. அதுலயே 10 பேர் பறந்து போய் விழுவான். எங்களுக்கெல்லாம் பெரிய ஐகான் அவரு. விசித்திரன்திரைப்படம்எல்லாருடையபாராட்டுக்குரிய ஒருபடம் அது. இதுவரைக்கும் கிட்டத்தட்ட 47 இண்டர்நேஷனல் அவார்டு, டொமெஸ்டிக் அவார்டு 20 கிட்ட வந்துருக்குனு நினைக்கிறன். இதுக்கு எல்லாத்துக்கும் எல்லாருக்கும் நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன்.

போஜ்பூரில இருந்து போன் பண்ணி என்னை பாராட்டினார்கள். பாலிவுட் ,தெலுங்குவில் இருந்து பெரிய ஆர்ட்டிஸ்ட் கால் பண்ணி பாராட்டினாங்க. இன்னைக்கு வரைக்கும் வருத்தம் என்னனா? நம்ம தமிழ்லஉள்ள ஆர்ட்டிஸ்ட்ல பெருசா யாருமே போன் பண்ணி சொல்லல. நான் போஜ்பூரில நடிக்கறேன், தெலுங்குல மகேஷ் பாபு சார் கூட நடிச்சிட்டு இருக்கேன். மலையாளத்துல நடிச்சிட்டு இருக்கேன். கன்னடபடம் பண்ணிட்டு இருக்கேன். எட்டு படம் பண்ணிட்டு இருக்கேன் நானு. அங்க போயிட்டு இங்கவிட்றகூடாதுங்கிறத்துக்காகதமிழ் படத்துலசூப்பர் ஸ்டார் படத்துல பண்ணப் போறேன். இங்க விடதெலுங்குல ஜாஸ்தியா கொடுக்கறாங்க.

போஜ்பூரில பாத்தீங்கன்னா, இங்க விட ரொம்ப கம்மி. ஆனாலும், கேரக்டருக்காக போய் நடிக்கறேன். அப்பறம் மலையாளம் பாத்தீங்கன்னா, இதுல இருந்து 50% கம்மியாத்தான் கொடுப்பாங்க. இருந்தாலும் அதுக்கு போய் நடிக்கிறதுக்கு காரணம் என்னனா? நம்ம நடிப்பு போய் எல்லாருக்கும் தெரியணும். உலக அளவுல தெரியணும். எல்லாரும் ஒற்றுமையா இருப்போம். எல்லாருக்கும் எல்லாரும் கைக்கொடுக்கணும்". இவ்வாறு ஆர்.கே.சுரேஷ் தெரிவித்தார்.

pressmeet
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe