விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கோலிசோடா-2’. சமுத்திரகனி, க்ருஷா, செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா, பாரத் சீனி, எசக்கி பரத், வினோத், ரேகா, ரோஹிணி, ஸ்டன்ட் சிவா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறது. இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் விஜய் மில்டன், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

gowtham menon

இந்நிகழ்ச்சியில் இயக்குநனர் கௌதம் மேனன் நெகிழ்ச்சியுடன் உணர்ச்சிகரமாகப் பேசியது...

‘ஓடுனவன் நின்னா, ஓடுனவன் அடிச்சா என்ன ஆகும் தெரியுமா?’அது தான் இந்தப் படம். மில்டன் என்னை கூப்பிட்டு "இந்த மாதிரி நீங்க படத்தில் நடிக்க வேண்டும்" என்றார். ஏற்கனவே எனக்கு வாய்ப்புகள் வந்திருக்கு, ஆனால் இது ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கும். மில்டன் நல்லா ஹேண்டில்பண்ணுவார். இந்தப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்று கேட்டேன். சமுத்திரக்கனி சார் இருக்காரு என்று சொன்னார். அவ்வளவுதான் சொன்னார். வேற யாரும் இல்லை என்று சொன்னது எனக்குப்பிடித்து இருந்தது. கொஞ்சம் கம்ஃபர்ட்டபுலா இருக்கும்.

கனி சார் நிறைய பேருக்கு பிரச்சனையில் உதவி செய்துஇருக்கிறார். அந்த லிஸ்ட்டில் நானும் ஒருத்தன். எனக்கு ஏதாவது என்றால் கூப்பிட்டு கேட்பாரு, 'என்ன ஆச்சுநான் உதவி செய்கிறேன்' என்று. அந்த மாதிரி ஒரு கேரக்டர். ரொம்பகம்ஃபர்ட்டபுலானஒரு கேரக்டர். புதுமுகங்களோடு ஒர்க் பண்ணது ரொம்ப நல்ல அனுபவமாஇருந்தது. நான் ஒன்றும் யோசிக்கவில்லை அவர் என்ன சொன்னாரோ அதை செய்தேன். நல்லா இருந்தா அதற்கு அவர்தான் காரணம், நல்லாஇல்லை என்றால் அதற்கு நான்தான் காரணம். இந்த லுக் எல்லாம் அவரே பிக்ஸ் செய்துவிட்டார். அந்த ஃபோட்டோ இப்ப வெளியிட்டு இருக்கிறார்கள். அதைப்பார்க்க எனக்கு ஒரு மாதிரியாக இருக்கு. ஆனா, இந்த டீம் கூட ஒர்க் பண்ணியதுரொம்ப சந்தோஷமாக இருந்தது.

Advertisment

Advertisment