Skip to main content

“அவரு மூலமா கிடைச்சது எனக்கு சந்தோசமான விசயம்” - எஸ்.ஜே.சூர்யா பேச்சு

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

"What I got through him is a happy thing for me" - SJ Surya speech!

 

'வதந்தி' வெப் சீரிஸ் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, "நான் ஆக்டிங்ல எவ்வளவு இன்ட்ரெஸ்ட்டானவன்னு தமிழ்நாட்டுக்கே தெரியும். முக்கியமா உங்க எல்லாருக்கும் தெரியும். எல்லாருமே என்னை குளோசா ஃபாலோ பண்ணிட்டு இருப்பீங்க. எங்க இருந்து எப்படி வாழ்க்கை போயிட்டு இருக்குதுனு எனக்கு எப்போதுமே ஆதங்கம் உண்டு. பெரிய இடங்களுக்குப் போகணும்; ரீச் ஆகணும்; அப்படினு சொல்லி ரொம்ப போராடி; பல போராட்டங்களெல்லாம் பண்ணிட்டிருந்தேன். 

 

நல்லது பண்ணினா அதன் மூலமாவே நல்லது நடக்கும்னு சொல்லுவாங்க. என்னோட அசிஸ்டெண்ட் டைரக்டரா இருந்த ஆண்ட்ருஸால இன்னைக்கு எனக்கொரு இண்டெர்நேஷனல் பிரேக் கிடைச்சிருக்கு. வாலி-ல இருந்து எனக்கு அசிஸ்டெண்ட் டைரக்டரா இருந்தாரு. இன்னைக்கு வரைக்கும் என் கூட அசிஸ்டெண்ட் டைரக்டரா வொர்க் பண்ணிட்டு இருக்காரு. அவரு மூலமா எனக்கு இவ்வளவு பெரிய பிரேக் கிடைச்சிருக்கு. அவரு மூலமா கிடைச்சது எனக்கு சந்தோசமான விசயம். 

 

கண்லயே நல்ல பவர கொடுக்கக் கூடிய பர்ஃபார்மன்ஸ். ஒரு நடுக்கடலில் இருக்கக் கூடிய அமைதியும், அதனுடைய ஆழத்தையும் உணர வைக்கக் கூடிய ஒரு பர்ஃபார்மன்ஸ ஆண்ட்ருஸ் சார் என்ட இருந்து புல்அவுட் பண்ணிருக்காரு. அதுமட்டுமில்லாமல், சில நேட்டிவிட்டி டையலாக் எல்லாம் புடிச்சிட்டு வந்தாரு. ஊர் மக்கள் பேசுற பஞ்ச் டையலாக்க அவரு யூஸ் பண்ணிக்கிட்டாரு. உண்மை நடக்கும்; பொய் பறக்கும். பொய் எப்படி பறக்குது, அடுத்தவங்க வாழ்க்கையை எவ்வளவு பாதிக்குது, நடந்த ஒரு விசயத்தை அதனோட ட்ரூ பெர்ஷெப்ஷன கண்டுபிடிப்பதற்கு முன்னாடி, அத நாம எப்படியெல்லாம் நினைச்சிக்கிறோம், எப்படியெல்லாம் பேசுறோம். 

 

இவ்வளவு எமோஷனோட  கனெக்டெடா ஒரு த்ரில்லர் வந்து, உலகத்தரம் வாய்ந்த இசையிலும், உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவிலும், ஒரு உலகத்தரம் வாய்ந்த பர்ஃபார்மன்ஸிலும் ஆண்ட்ருஸ் சார் எல்லாருகிட்டையும், அந்த வேலையை கரெக்ட்டா வாங்கிருக்கிறாரு. யூ ஆல் என்ஜாய் திஸ். சுழலுக்கு அப்புறம் இண்டர்நேஷனல் ரிலீஸ் இது.

 

தமிழ்நாட்லேயே எத்தனையோ வெப் சீரிஸ் ரெடியாகி வந்துருக்கு. தமிழ்ல பெரிய படத்துக்கு ஸ்பென்ட் பண்ற பட்ஜெட்டுங்க இது. ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டை அவங்க புல்அவுட் பண்ணிருக்காங்க. கொரோனா காலத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்ட்டுக்கு மட்டுமே இருக்குங்க ஒரு கோடிக்கு பில்லு. தினமும் அதிகபட்சம் 170 முதல் 200 பேர் வரை சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார்கள். ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானாலும், அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்வதேச தரம்” - தனுஷ் குறித்து எஸ்.ஜே. சூர்யா

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
sj suryah about dhanush raayan movie

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து படத்தில் செல்வராகவன் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்த நிலையில், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. எஸ்.ஜே. சூர்யா கதாபாத்திர லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  இப்போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, படம் குறித்து பதிவிட்ட எஸ்.ஜே. சூர்யா, “தனுஷ் சார், உங்கள் இயக்கத்தில் நடிப்பது சந்தோஷம். அதற்காக நன்றி. நான் முன்னதாக சொன்னது போல இப்படம் ரத்தமும் சதையுமாய் எமோஷ்னல் கலந்து சர்வதேச தரத்தில் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கோடை விருந்தாக இப்படம் இருக்கும் எனவும் குறிப்பிட்டு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.  

Next Story

“கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன்” - எஸ்.ஜே சூர்யா

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
sj surya suffering from viral fever

எஸ்.ஜே. சூர்யா தற்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் தீவிர வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார். தன்னை ஒரு பட நிகழ்ச்சிக்கு அழைத்த நிலையில் அதற்கு வரமுடியாமல் போனதற்கான காரணத்தை பகிர்ந்த பதிவில் இதை குறிப்பிட்டுள்ளார். பாபி சிம்ஹா, மேத்யூ வர்கீஸ், வேதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரஸாக்கர். கூடூர் நாராயண ரெட்டி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை யாத சத்யநாராயணா இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில் இதில் கலந்து கொள்ளும்படி எஸ்.ஜே சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

ஆனால் இதில் கலந்துகொள்ளாத சூழலில் இருப்பதாக தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டியர் தம்பி பாபி சிம்ஹா கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும் தம்பி. மேலும் படத்தின் வெற்றி சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவிற்கு கீழ் ரசிகர்கள் பலரும் எஸ்.ஜே சூர்யாவின் உடல் நலம் தேறி வருமாறு கமெண்ட் செய்த நிலையில், அது தொடர்பாக பதிவிட்ட எஸ்.ஜே சூர்யா, “4வது நாளாக முன்னேறி வருகிறோம். அன்பிற்காக எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.