/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Bose.jpg)
போஸ் வெங்கட் சின்னதிரையில் ஆரம்பித்து பெரிய திரை வரை குணச்சித்திர கதாபாத்திரங்களில் முத்திரை பதித்தவர். கன்னிமாடம் திரைப்படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர். நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சார்பாக அவரை சந்தித்தோம். நமது பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் ரோபோ சங்கர் உடல்நிலை குறித்த கேள்வியை முன் வைத்தோம். அதற்கு அவர்உண்மை நிலவரத்தை விளக்கினார்.
போஸ் வெங்கட்பேசியதாவது, “ரோபோ சங்கர் நல்லவர்.ரொம்ப நன்றி உள்ளவர். அது தான் அவர்வளர்ந்ததுக்கு காரணம்.அவரோட குடும்பமே எங்க குடும்பத்தோட நெருக்கமானவர்களாகத் தான் இருக்கிறார்கள். நான் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார்கள். உடல்நிலை சரியில்லை என்பது உண்மை தான். நல்லபடியாக உடல்நிலை தேறி வந்துவிட்டார். மருத்துவர்களின் அறிவுரைப்படி இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாய் குணமாகிவிடுவார்.
இன்னும் ஆறு மாதத்தில் உடல் எடை அதிகரிப்பில் கவனம் செலுத்தி எப்போதும் போல நடிக்க வந்துவிடுவார். உடல் நிலை சரியில்லாமல் போவது என்பது இயல்புதான். சினிமா துறைசார்ந்தவர்களுக்கு நோய் என்று வரும் போது அது ஒரு பெரிய விமர்சனமாக மாறிவிடுகிறது. வதந்திகள் வரும். அது தான் ரோபோ சங்கருக்கும் நடந்திருக்கிறது. இனி அதுவெல்லாம் நடக்காது. விரைவில் நடிக்க வருவார்” என்று ரோபோ சங்கர் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)