Advertisment

மாநாடு ஷூட்டிங் என்னாச்சு? வேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...

கடந்த 2007ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை படம் ‘சென்னை 600028’. இதன் பின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ், சென்னை 600028 செகண்ட் இன்னிங்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

Advertisment

ragava lawrence

இந்த நிலையில்தான் சிம்புவை வைத்து மாநாடு என்றொரு படத்தை சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் இயக்க இருந்தார். ஆனால், சிம்பு படத்திற்கு ஓகே சொல்லிவிட்டு, ஷூட்டிங்கிற்கு வராமல் தவிர்த்ததால், வெங்கட் பிரபுவின் மாநாடு படம் தற்போதுவரை ஷூட்டிங் தொடங்காமலே இருக்கிறது.

சிம்புவிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜனவரி மாதம் இறுதியில் இந்த படத்தின் தொடங்கப்படலாம், சிம்புவுடன் இயக்குனர் பாரதிராஜாவும் நடிக்க இருக்கிறார் என்றெல்லாம் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

Advertisment

alt="iruttu" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="861e4694-2cf4-4473-b41f-99324b316734" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_10.jpg" />

இந்நிலையில் வெங்கட் பிரபு நடிகர் ராகவா லாரன்ஸை சந்தித்துள்ள புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், “கடவுள் தன்மையானவர். நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே நடக்கும் மற்றும் அதன்படிதான் இது நடந்திருக்கிறது, நன்றி. விரைவில் அப்டேட் ” என்று தெரிவித்துள்ளார்.

இதனால் மாநாடு படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படுமா, அது சாத்தியம்தானா என்கிற கேள்விகளில் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் புலம்பிக்கொண்டிருக்கின்றனர்

raghava lawrence venkat prabhu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe