Advertisment

அடுத்த படம் என்ன ஜானரில் இருக்கும்? - ரகசியம் உடைத்த ராஜமௌலி

Rajamouli

Advertisment

தெலுங்கு திரைப்பட இயக்குநரான ராஜமௌலி, பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்களுக்குபிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குநராகியுள்ளார். அவரது அடுத்த படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக கனடா சென்றுள்ள ராஜமௌலி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தன்னுடைய அடுத்த படத்தின் ஜானர் குறித்து பேசிய அவர், “மகேஷ் பாபு உடனான என்னுடைய அடுத்த படம் உலகளாவிய ஆக்‌ஷன் படமாக இருக்கும். ஜேம்ஸ் பாண்ட், இண்டியானா ஜோன்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களின் பாணியிலான இந்தியப் படமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் முதற்பாதியில் தொடங்கவுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

s.s.rajamouli
இதையும் படியுங்கள்
Subscribe