/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kamalhaasan34.jpg)
சென்னையில் நடைபெற்ற 'செம்பி' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், "சரளா பாப்பாவை ரொம்ப நாளா எனக்கு தெரியும். இதுல நிறைய பேர் பிரமாதமாக பண்ணிருக்காங்க. அவங்கள ஒவ்வொருத்தரையும் பாராட்ட வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. இங்க வந்தவர்கள் என்னைப் பாராட்டிப் பேசினார்கள். எனக்கு ஞாபகம் இருக்கு, 16 வயதினிலே படத்துக்கு முன்னாடி, அந்த போட்டோ ஆல்பத்தை எடுத்துக்கிட்டு நான் போகிற மலையாளக் கம்பெனில் பிஆர்ஓ மாதிரி காட்டிட்டிருப்பேன். சில பேர் நல்ல வார்த்தைசொல்லுவார்கள்.
சில பேர் சொல்லும் வார்த்தைகள் சந்தோசமாகவும் எங்களுக்கு இருந்தது. அதையெல்லாம், அவர் சொல்லும்போது எனக்கு ஞாபகம் வந்தது. 16 வயதினிலே படம்40 ஆண்டுகளுக்கு முன்னாடி வந்துஇன்னைக்கும் ஞாபகம் வைத்து பேசுறோம். அதான் பெரிய படம். இத்தனை கோடியில் எடுத்தும். அது என்ன படம் பேரு? எனக் கேட்கிறோம் இல்லையா அதுதான் சின்னப்படம். நமது அமைதி இருக்கிறது இல்லையா, அது தான் பெரிய ஆபத்து. என்னுடைய மேடைகளில் பேசும் போதெல்லாம் சொல்வதுஇது ஏன் இப்படினு,பண்றத கேட்கறதுக்கு ஆளே இல்லனா தொடர்ந்து தவறுகள் நடந்துகொண்டே இருக்கும்.
அதை சொல்லும் ஒரு படம்.அதனால் எனக்கு பிடித்திருக்கிறது. ஏன்னா ஞாபகம் படுத்துது. உங்களுக்கு கடமை இருக்கு. இன்னும் சொல்றேன். ரசிகர்களாக உங்களுக்கு இருக்கும் மாபெரும் கடமைநல்லாருக்குற படத்த நல்லாருக்குனு சொல்லணும்நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லனு தைரியமா சொல்லணும். எத்தனை கோடி செலவு பண்ணினாலும்அதைப் பற்றி பயப்படக் கூடாது. உலக வெளிச்சம் தமிழ் சினிமா மேல் பட வைத்தாருனுதம்பி பேசுனாரு. கேட்க சந்தோஷமாதான் இருந்துச்சு. ஆனா, இந்த வெளிச்சம் படணும்னா நீங்கள் வெளிச்சம் போட்டு காட்டணும் நல்ல படத்த, நல்ல நடிகனை.
நாங்கள் எல்லாம் சும்மா இல்லை.கோவை சரளாவைப் பாராட்டுவது. நிஜமாவே அந்த திறமையைப் படைத்திட வேண்டும்.நிலாவும் அப்படி தான்.தம்பி ராமையாவும் அப்படி தான். அவங்கெல்லாம் எனக்கு சொல்லிக் காட்டணும். அது என் கடமை. ஆனா என்ன விட திறமையானவர்கள் எங்கிருந்தார்கள் என்று காணாமலே இறந்து போயிருக்கிறார்கள்னுஎனக்கு தெரியும். என் கூட விளையாடிட்டு இருந்தவங்க, என்னை விட சிறப்பாக பல விஷயங்கள், நான் செய்த எல்லாவற்றையும் செய்தவர்கள், வாய்ப்பு கிடைக்காமப் போயிருக்காங்க.
அதுக்கு யார் பொறுப்புன்னு யோசித்துப் பாத்தம்னா, என் பொறாமை பொறுப்பா இருந்திருக்குமோ? அப்படினு நான் கண்ணாடியில பாப்பேன். இல்ல ரசனை வளர வேண்டும். அதனால தான் என்னுடைய வாழ்க்கையின் மெசேஜ் ஆக ரசனையை வளர்ப்பது எனது கடமை. அது என்ன இவரு வளர்க்கறது, யார் வேணாலும் வளர்க்கலாம். ஒரு விதை, ஒரு செடி வளர்ந்துடும். பறந்துபோன பறவைக்குத்தெரியாது தான் ஒரு காட்டை விதைத்துக் கொண்டிருக்கிறோம் என்று. கடமை செய்துகொண்டுபோயிருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)