Advertisment

'உங்கள மாதிரி நாங்களும் வெயிட்டிங்' - எதிர்பார்ப்பை எகிற வைத்த 'பீஸ்ட்' படக்குழு

'We're Waiting Like You' - The 'Beast' film crew raised the expectations.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் படக்குழுவிடம் இருந்து தொடர்ந்து அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 2-ல் வெளியாகும் என சமீபத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து ட்ரைலரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Advertisment

இந்நிலையில் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் படத்தின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, "நாங்களும் உங்கள மாதிரி பீஸ்ட் டிரைலர்க்கு வெயிட்டிங் நண்பா” எனக் குறிப்பிட்டுள்ளது. விஜய், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உள்ளிட்ட ஏழுபேர் இடம் பெற்றிருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

pooja hegde selvaraghavan sun pictures. actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe