
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். ஹிந்தியில் 14 சீஸன் வரை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து மற்ற இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்நிகழ்ச்சியை தொடங்கினார்கள்.
தமிழில் அக்டோபர் நான்காம் தேதி முதல் நான்காவது சீஸன் ஒளிபரப்பானது. முன்னதாக மூன்று சீஸன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன்தான் இந்த சீஸனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், இந்த வருட நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், ரியோ, ரேகா, அறந்தாங்கி நிஷா, ஆஜித் காலிக், ஷிவானி, அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ், பாலாஜி முருகதாஸ், ஷனம் ஷெட்டி, கேப்ரல்லா, ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் கடந்த வாரம், பிக்பாஸ் 4 நிகழ்ச்சியிலிருந்து நடிகை ரேகா எவிக்ட் செய்யப்பட்டார். குறைவான வாக்குகளை மக்களிடம் இருந்து பெற்றதால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், இந்த வாரம் வெளியேறவுள்ளவர்களின் பட்டியலில், ஆஜீத், ஆரி, அனிதா சம்பத், பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி என ஐந்து பேர் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் குறைவாக வாக்கு பெறுபவர், நடிகை ரேகாவைப் போல போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார். ஒருவேளை, ஆஜித்துக்குக் குறைவான வாக்குகள் கிடைத்தால், அவரால் தன்னிடமுள்ள பரிசைக் கொண்டு தப்பிக்க முடியும்.