weapon movie helped affected people by cyclonemichaung

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இதனிடையே திரைப் பிரபலங்கள் விஜய், சூர்யா, கார்த்தி, நயன்தாரா உள்ளிட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகப் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். மேலும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் நாடு படக்குழுவினர்,தாம்பரம் மற்றும் முடிச்சூர் பகுதி மக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை தேவையான பொருட்களை வழங்கினார்கள். அப்போது அவர்கள் நாடு படத்தின் தலைப்பு பொருந்திய டி-ஷர்ட்டை அணிந்திருந்தனர். இதனைத்தொடர்ந்து வெப்பன் படக்குழு பள்ளிக்கரணை, மதுரவாயல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2,000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் 400 மளிகைப் பொட்டலங்கள் வழங்கினர். இவர்களும் படத்தின் தலைப்பு பொருந்திய டி-ஷர்ட்டை அணிந்திருந்தனர்.

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெப்பன்’. இப்படத்தில் வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மில்லியன் ஸ்டுடியோ சார்பில் எம்.எஸ். மன்சூர் வழங்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

Advertisment