Advertisment

"போதை பொருளை ஒழிக்க ஒன்று சேர வேண்டும்" - விஷால் அதிரடி

publive-image

Advertisment

விஷால், தற்போது அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கும் 'லத்தி' படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே 'துப்பறிவாளன்' மற்றும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் விஷால், போதை பொருளை ஒழிக்க முயற்சித்து வரும் ஐ.பி.எஸ் அதிகாரி அஸ்ரா கர்க் அவர்களுக்கு ஆதரவாக நிற்பேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால் வெளியிட்டுள்ள வீடியோவில், "வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல நல்ல மனிதர்களை பார்த்து வியந்திருப்போம். இதெல்லாம் தாண்டி தென் மண்டல போலீஸ் பிரிவை சார்ந்த அஸ்ரா கர்க் அவர்களுக்கு நடிகனாக இல்லாமல் ஒரு சாமானியனாகப் பெருமைப்படுகிறேன், தலை வணங்குகிறேன்.

மேலும் இந்த சமுதாயத்தில் கரோனாவிற்கு பிறகு போதை பொருள் விவகாரம் பல மாநிலங்களில் அதிகமாக உள்ளதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கடந்த ஒரு வருடத்தில் தமிழ்நாட்டில் மாணவர்கள் மத்தியில் இந்த போதை பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. நம்நாட்டில் தவறான வழிகளில் போக பல பாதைகள் இருக்கின்றன. ஆனால் போதை பொருள் பழக்கம் என்பது படிக்கிற பிள்ளைகள் வாழ்க்கை பாதிக்கப்படும். இது தொடர்பாக களத்தில் இறங்கி, சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்யும் அஸ்ரா கர்க் அவர்களுக்கு ஒரு சாமானியனாக அனைவரும் ஒன்று சேர்ந்து உதவிசெய்ய வேண்டும் என வேண்டுகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

actor vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe