
அசோக் செல்வன் நடிப்பில் ரித்து வர்மா ஜோடியாக நடித்துள்ள நித்தம் ஒரு வானம் படக்குழுவினர் சென்னையில் நேற்று (30/10/2022) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய இயக்குநர் கார்த்திக், "நமக்குனு சினிமா பண்ணும் போது, எப்போதுமே சொல்ற கதைல பொறுப்பு இருக்கணும்னு நினைப்பேன். அந்த கதைல நம்பிக்கை இருக்கணும், நம்ம சுத்தியிருக்கிற கதாபாத்திரங்கள், நம்ம சுத்தியிருக்கிற ஃபேமிலி, ரிலேட்டிவ்ஸ் எல்லாருட்டயும் எமோஷ்னல் பாண்டிங் இருக்கு. அந்த எமோஷ்னல் பாண்டிங்க கதைல சொல்லணும் நினைப்பேன். இந்த கதை அப்படித்தான். இந்த படம் முடிச்சிட்டு நீங்க வெளியே வரும் போது, உங்க வாழ்க்கையில எவ்வளோ பெரிய ஸ்ட்ரெஸ், எவ்வளவு ஃபீல் இருந்தாலும் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு இரண்டரை மணி நேரம் படத்தைப் பார்த்து வெளியே வரும் போது ஒரு சின்ன மன நிம்மதியும், ஒரு சின்ன புன்சிரிப்பும் உங்களுக்குள்ள இருக்கும்னு நான் நினைக்கிறன்.
நிறைய பேருக்கு நன்றி சொல்லணும். நிறைய பேருக்கு மன்னிப்பு சொல்லணும். ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு. சின்னதா சொல்லிட்றேன். ஒரு கதையெல்லாம் எழுதிலாம் முடிச்சிட்டேன். நான் சென்னை வந்து 20 வருசம் ஆச்சு. 20 வருசமா வெயிட் பண்ணேன். எங்க அப்பா, அம்மாவுக்கு தான் நிறைய நன்றி சொல்லணும். ஏன்னா, இந்த 20 வருசத்துல என்னை என்னைக்குமே வந்து எந்த பொறுப்பையும் தலையில வச்சி எனக்கு பாரத்தைக் கொடுத்ததே கிடையாது. அவங்க இரண்டு பேரைத் தாண்டி என்னுடைய லைஃப் உள்ள வந்த என்னுடைய மனைவி. இன்னைக்கு ஏழு வருசம் ஆச்சு. ஏழு வருசத்துல என்னைக்குமே எனக்கு நீ சீக்கிரம் படம் பண்ணியாகணும், கார் வாங்கணும்னு எந்த ஸ்ட்ரெஸ்ஸும் போட்டது கிடையாது.
அதனால தான் இந்த கதை அவ்வளோ நல்லா வந்துருக்கு. அந்த பொண்ண கட்டிக் கொடுத்த மாமனார், மாமியார் கூட யாருமே கேள்வி கேட்டது கிடையாது. எல்லாமே சுத்தி நம்பின நம்பிக்கை தான் இந்த படம் வந்துருக்கு. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வேலை செஞ்ச ராம், பிரவீன், மதுமிதா ஆகிய மூன்று பேருமே ஃப்ரெஷர்ஸ். எந்த சம்பளமும் இல்லாமல் என்னை நம்பி இருந்தாங்க. அதுக்கப்புறம் ஒரு ப்ராஜெட் அமைந்தது. நல்லா எழுதிடுவோம். இந்த ஊர் போறோம், அந்த ஊர் போறோம்னு இன்பச் சுற்றுலா போற மாதிரி கதையெல்லாம் எழுதி முடிச்சிட்டேன்.
அத்தனை ஊருக்கும் இந்த கதை போயிருக்குனா சாகர் சார் தான் காரணம். மணாலி போக வேணாம். கொடைக்கானலிலேயே சூட் பண்ணிக்கலாம்னா நமக்கு ஆப்ஷனே கிடையாது. கொடைக்கானல், ஏற்காட்ல தான் சூட் பண்ணிருப்போம். கதை சென்னைல ஆரம்பிச்சு கொல்கத்தா, சண்டிகர், மணாலி, கேரளா, பொள்ளாச்சி என அப்படி ஒரு பெரிய ரவுண்ட் இருக்கும்" எனத் தெரிவித்தார்.