Advertisment

ராம் சரண் பட படப்பிடிப்பு தளத்தில் வாட்டர் டேங்க் வெடித்து விபத்து

water tank bursts on ram charan movie set

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் ‘தி இந்தியா ஹவுஸ்’. இப்படத்தை தனது ‘வி மேகா பிக்சர்ஸ்’ நிறுவனம் மூலம் வழங்குகிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நிகில் சித்தார்த்தா நாயகனாக நடிக்க அனுபம் கெர், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராம் வம்சி இயக்கும் இப்படம் இந்திய வரலாற்றில் மறக்கப்பட்ட ஒரு அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகவும் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் லண்டனில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இப்படத்தின் அறிவிப்பு 2023ஆம் ஆண்டு சாவர்க்கரின்140வது பிறந்தாளன்று மோஷன் போஸ்டருடன் வெளியிடப்பட்டது. இந்த சூழலில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அப்போது இன்று ஒரு கடல் பின்னணியில் நடக்கும் ஒரு ஆக்‌ஷன் காட்சியை படமாக்கியுள்ளனர். அதனால் கடல் போன்ற செட்டை போட்டு படமாக்கியுள்ளனர். அப்போது செட்டிற்காக அருகில் வைக்கப்பட்டிருந்த வாட்டர் டாங் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு தள முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வாட்டர் டேங்கில் ஆயிரம் லிட்டர் தண்ணீர் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த விபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் கடல் செட் சேதமடைந்துள்ளது. உதவி ஒளிப்பதிவாளர் ஒருவர் மற்றும் சில படக்குழு உறுப்பினர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. காயம்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

tollywood accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe